புதுச்சோியில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சோியில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

Update: 2021-12-10 16:42 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் நகர போலீசார் நேற்று மாலை புதுச்சேரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி, வந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் 29 அட்டை பெட்டிகளில் 1,392 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அடுத்த திம்மாவரம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் குமார்(வயது 35) என்பதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக செங்கல்பட்டுக்கு மதுபாட்டில்கள் கடத்தியதும் தெரியவந்தது. 

இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டிவனம் கலால் போலீசில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் காரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். 

மேலும் செய்திகள்