மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் நேற்று முன்தினம் வீட்டு மாடியில் ஏறுவதற்காக சென்றார்.
அப்போது மாடியில் இருந்த இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.