கோத்தகிரியில் மழைக்கு வீடு இடிந்து சேதம்

கோத்தகிரியில் மழைக்கு வீடு இடிந்து சேதம்

Update: 2021-12-10 14:31 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா, சாமைகூடல் ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் (வயது 42) என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண தொகையான ரூ.4,100-யை கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் வழங்கினார்.

மேலும் செய்திகள்