திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அஜய், டாக்டர்கள் அம்பிகாபதி திருமலை, மெர்வினோ தேவதாசன், செவிலியர் லட்சுமி பிரியா, மருந்தாளுனர் ராஜா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதிதேவி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.