முன்விரோத தகராறில் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்

முன்விரோத தகராறில் வீட்டுக்கு தீ வைத்த கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-12-10 09:39 GMT
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும், தேனாம்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இருவரும் தங்கள் கூட்டாளிகளுடன் மாறி மாறி கத்தியால் வெட்டிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது தம்பி தினேஷ், நண்பர்களான கவுதம், குள்ள சதீஷ் ஆகியோருடன் சுரேசின் மைத்துனரான அப்புவை கத்தியால் வெட்டியதுடன், தேனாம்பேட்டையில் உள்ள சுரேசின் மாமியார் வீட்டுக்கு தீ வைத்தனர். அத்துடன் கண்ணகி நகரில் சுரேசின் மனைவி ஜெனிபரை தாக்கி தாலியை பறித்ததுடன், அவரது வீட்டையும் தீ வைத்து எரித்தனர்.

இதுபற்றி கண்ணகிநகர் மற்றும் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்