பிபின் ராவத் உருவப்படத்துக்கு போலீசார் மரியாதை
நெல்லையில் பிபின் ராவத் உருவப்படத்திற்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் போலீசார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.