கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை

கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை

Update: 2021-12-09 18:27 GMT
சாத்தூர்
சாத்தூர் காட்டு புதுத்தெருவில் வசித்து வருபவர் ஆதீஸ்வரன்(வயது 58). இவர் பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோயினால் அவதிபட்டு வந்துள்ளார்.. இவர் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே தனியாக வசித்து வந்துள்ளார். நோயின் தாக்கம் தீவிரமாகவே சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் ஆதீஸ்வரன் அங்கு செல்லாமல் வைப்பாறு பாலம் அருகே கத்தியை வைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்