ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 3,01,753 வாக்காளர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 3,01,753 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 5 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.
இந்த வாக்காளர் பட்டியல் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,01,753 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
நகராட்சிகள்
அரக்கோணம் :- ஆண்கள்- 32,330, பெண்கள்- 34,515, மொத்தம்- 66845.
ஆற்காடு :- ஆண்கள்- 22,468, பெண்கள்- 24,519, மூன்றாம் பாலினத்தவர்- 1, மொத்தம்- 46,988.
மேல்விஷாரம்:- ஆண்கள்- 19,500, பெண்கள்- 20,099, மூன்றாம் பாலினத்தவர்- 1, மொத்தம்- 36,900.
ராணிப்பேட்டை:- ஆண்கள்- 19,623, பெண்கள்- 22,062 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்- 4, மொத்தம்- 41,689.
வாலாஜா:- ஆண்கள்- 12802, பெண்கள்- 13,986, மூன்றாம் பாலினத்தவர்- 2, மொத்தம்- 26,790.
மாவட்டம் முழுவதிலும் நகராட்சி பகுதிகளில் 1,06,723 ஆண் வாக்காளர்கள், 1,15,181 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,21,912 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சிகள்
அம்மூர்:- ஆண்கள்- 5,188, பெண்கள்- 5,560, மூன்றாம் பாலினத்தவர்- 2, மொத்தம்- 10,750.
கலவை:- ஆண்கள்- 3,733, பெண்கள்- 3,975, மொத்தம்- 7,708.
காவேரிப்பாக்கம்:- ஆண்கள்- 5,855, பெண்கள்- 6,317, மொத்தம்- 12,172.
நெமிலி:- ஆண்கள்- 4,489, பெண்கள்- 4,820, மூன்றாம் பாலினத்தவர்-1, மொத்தம்- 9,310.
பனப்பாக்கம்:- ஆண்கள்- 4,869, பெண்கள்- 5,208, மொத்தம்- 10,077.
தக்கோலம்:- ஆண்கள்- 4,581, பெண்கள்- 4,817, மொத்தம்- 9,398.
திமிரி:- ஆண்கள்- 6,523, பெண்கள்- 6,956, மூன்றாம் பாலினத்தவர- 2், மொத்தம்- 13,481.
விளாப்பாக்கம்:- ஆண்கள்- 3,471, பெண்கள்- 3,474, மொத்தம்- 6,945.
மாவட்டம் முழுவதிலும் பேரூராட்சி பகுதிகளில் 38,709 ஆண் வாக்காளர்கள், 41,127 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்-5, ஆக மொத்தம் 79,841 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) மரியம் ரெஜினா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.