லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.45 லட்சம்
லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.45 லட்சம்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி ஊர் கோவில், மலைக் கோவில், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மலையடிவாரம் ஆகிய இடங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் உதவி ஆணையர் ஜெயா, காஞ்சீபுரம் உதவி ஆணையர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி ஊர்கோவிலில் நடந்தது. இதில் ரூ.45 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 156 கிராம் தங்கம், 240 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.