ராமநாதபுரம் நேருநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார் (வயது 42). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக பட்டணம்காத்தான் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்யாணகுமார் பரிதாபமாக இறந்தார்.