வாணியம்பாடி
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சென்னை கோட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்திரவின் பேரில், வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், பறக்கும் படையினர் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதியிலும் மற்றும் ெரயில் நிலையங்கள் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது சோமநாயக்கன் பேட்டை ெரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து மர்ம நபர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பறக்கும் படை போலீசார் அங்கு செல்வதற்குள் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கு மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.