திருமழிசை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சட்டப்பேரவை பொதுக்குழு நேரில் ஆய்வு
திருவள்ளூரை அடுத்த நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மேம்படுத்தப்பட்ட பணிகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் விவரங்களை கேடடனர்.
இந்த ஆய்வில் பொது கணக்கு குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், சிந்தனைசெல்வன், சுதர்சனம், பிரகாஷ், மாரிமுத்து, ராஜா, வேல்முருகன், வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி சட்டமன்ற பேரவை செயலாளரும், பொது கணக்கு குழு செயலாளருமான சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இக்குழுவினர் திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட திருமழிசை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பூண்டி நீர் தேக்கத்தில் நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து பூண்டி விருந்தினர் மாளிகையில் வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.