கோவையில் பூக்கள் விலை அதிகரிப்பு

கோவையில் பூக்கள் விலை அதிகரிப்பு

Update: 2021-12-09 14:02 GMT

கோவை

கோவை மாவட்டம் காரமடை, அன்னூர் மற்றும் சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கோவை பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

 இங்கு பொதுமக்கள் மற்றும் சிறிய வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். 

தற்போது பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ஒரு ரூ.700-க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.320-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.800-க்கும், ரூ.600-க்கு விற்ற முல்லை,

 ரூ.1200-க்கும் ரூ.350-க்கு விற்ற அரளி ரூ.480-க்கும், ரூ.120-க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்ற சம்பங்கி ரூ.140-க்கும், 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

வழக்கமாக ரூ.2 ஆயிரத்துக்கு விற்கும் கல்யாண மாலை ரூ.4,500-க்கு விற்கப்பட்டது.

இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. 

கடந்த 8, 9 மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 13-ந் தேதி ஆகியவை வளர்பிறை சுபமுகூர்த்தநாட்கள் ஆகும். இதன் காரணமாக தேவை அதிகரித்து உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்