சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 43 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிேராதமாக கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 43 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 1,800 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 75 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.