மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-09 11:48 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு மலையடிவாரத்தில் ராஜகோபால் நகரில், மலைவாழ் மக்கள் 60 குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக சொந்த வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், கிளை செயலாளர் துரை, இனாம்மணியாச்சி கிளை செயலாளர் அழகு சுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தார் அமுதாவிடம் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்