கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

நிலக்கோட்டை அருகே கால்வாயில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியாகினார்.

Update: 2021-12-08 19:36 GMT
நிலக்கோட்டை: 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவர், நேற்று காலை அதே பகுதியில் உள்ள வைகை அணையிலிருந்து கள்ளந்திரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி நீரில் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில்  தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் படைவீரர்கள் கால்வாய் நீரில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நிலக்கோட்டையை அடுத்த போடியகவுண்டம்பட்டி அருகே கால்வாயில் வேலுச்சாமியின் உடலை மீட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்