அய்யப்பசாமி கோவிலில் தெப்பத் திருவிழா

பெரம்பலூரில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2021-12-08 19:24 GMT
பெரம்பலூர்
பெரம்பலூரில், தெப்பக்குளம் கிழக்குகரையில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் 55-வது ஆண்டு மண்டல பூஜை உற்சவ விழா கடந்த 7-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கோ பூஜை, அய்யப்ப சுவாமிக்கு 108 கலச அபிசேகம் நடந்தது. இரவு திருவிளக்கு வழிபாடு மற்றும் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது. தெப்ப உற்சவத்தை தொடர்ந்து யானை வாகனத்தில் அலங்கார ஊர்வலமும், அதன்நிறைவில் அய்யப்பசுவாமி கோவிலில் அன்னதானமும் நடந்தது.
தெப்ப உற்சவத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், அய்யப்ப சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் வள்ளி ராஜேந்திரன் மற்றும் சேவா சங்க நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பக்குளத்தில் நீர் நிரம்பி உள்ளதால் நேற்று நடந்த தெப்பத் திருவிழாவை காண பெரம்பலூர் நகர் முழுவதும் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிலர் குளத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்