புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் மீது வழக்குபதிவு
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் வளவெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவாலயன்(வயது 32), உடையார்பாளையத்தை சேர்ந்த குமார் (48), சுப்பிரமணியன் (61), ராமநாதன் (72), இடையாரைச் சேர்ந்த ரமேஷ் (29), தத்தனூர் மாந்தோப்பை சேர்ந்த ஞானசேகர் (51) ஆகிய 6 பேர் அவர்களது மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.