ரெயில்வே பாலத்துக்கு அடியில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
ரெயில்வே பாலத்துக்கு அடியில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
அரக்கோணம்
அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் பச்சை நிறத்தில், வெள்ளை மற்றும் சிவப்பு நிற டிசைன் போட்ட டி-சர்ட், வெளிர் சந்தன நிற பேண்ட் அணிந்திருந்தார். அவருக்கு 25 வயது இருக்கும். அவரின் தலை, உடல் துண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் கிடந்தன. அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.