பள்ளிபாளையத்தில் மார்க்கெட்டிங் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையத்தில் மார்க்கெட்டிங் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 29). இவருடைய மனைவி பூவாம்பிகா (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். செந்தில்குமார் ஈரோட்டில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செந்தில்குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூவாம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பூவாம்பிகா பள்ளிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.