காஞ்சீபுரம் அருகே லாரி-பஸ் மோதல்; 15 பேர் காயம்
காஞ்சீபுரம் அருகே டிப்பர் லாரி மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவன பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் வழியாக பாலுச்செட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் இருந்த 15 பேர் காயமடைந்தனர்.
இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். தனியார் நிறுவன பஸ் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.