லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தந்தை பரிதாப சாவு; மகனுக்கு தீவிர சிகிச்சை

புளியரை அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் தந்தை பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான்.

Update: 2021-12-07 20:00 GMT
செங்கோட்டை:
புளியரை அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் தந்தை பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான்.

தந்தை-மகன்

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்தவர் சுஜிவ் (வயது 47). இவரது மகன் ஷபான் (12). சம்பவத்தன்று சுஜிவ் தனது மகனை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டைக்கு வந்து கொண்டு இருந்தார்.  

புளியரை அருகே தமிழக-கேரள எல்லையான எஸ்.வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்புவதற்காக சுஜிவ் நின்ற போது, பின்னால் இருந்து லாரி ஒன்று வந்தது.

பலி

கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சுஜிவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஷபான் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து உடனடியாக புளியரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ஷபானை மீட்டு சிகிச்சைக்காக செங் ேகாட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்ேகாட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். மேலும் பலியான சுஜிவ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவரான கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த சித்திக் (48) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்