தர்மபுரியில் மனைவியை தாக்கியவர் கைது

தர்மபுரியில் மனைவியை தாக்கியவர் கைது

Update: 2021-12-07 18:34 GMT
தர்மபுரி:
தர்மபுரி சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 28). இவருடைய மனைவி ரேவதி (24). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடாஜலபதி மது அருந்த சென்றதாகவும் அப்போது மனைவி மது அருந்த வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாஜலபதி மனைவியை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ரேவதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாஜலபதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்