தர்மபுரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூ.27,200 பறிமுதல்
தர்மபுரி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூ.27,200 பறிமுதல்
தர்மபுரி:
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் அடுத்த கொட்டாய் ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), சரவணன் (42), மாரியப்பன் (42), ஆறுமுகம் (22), தவமணி (34), சசிகுமார் (45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27,200 பறிமுதல் செய்யப்பட்டது.