6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-12-07 18:34 GMT
நாமக்கல்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நாமக்கல் மாவட்டம் மோடமங்கலம் அருகே உள்ள வால்ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 67). ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளி. 
இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி 6 வயது சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பழனிசாமியை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்