தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மன்னார்குடி அருகே அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண், தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண், தூக்குப்போட்டு தற்காலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளத்தொடர்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய்க்கரை வீரவன்னியர் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது45). இவர், தனது கணவரை பிரிந்து கடந்த 11 வருடங்களாக காளவாய்க்கரை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார்.
இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(50). இவருடைய மனைவி வீரச்செல்வி(44). மாரியம்மாளுக்கும் மகேந்திரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாக அவரது மனைவி வீரச்செல்வி அக்கம், பக்கத்தினரிடம் கூறியதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு
இதனால் மனவேதனை அடைந்த மாரியம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு எதிர் வீட்டில் வசிக்கும் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி வீரச்செல்வி ஆகியோர் தான் காரணம் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய மன்னார்குடி போலீசார் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி வீரச்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.