புதுக்கோட்டையில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.

Update: 2021-12-07 17:22 GMT
புதுக்கோட்டை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகள் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாமன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்