ரெயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாப்பு படையினர் சோதனை
ரெயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
தாமரைக்குளம்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று அரியலூர் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்து அனுப்பினர். மேலும் தாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலோ அல்லது பயணம் செய்யும் இடத்திலோ சந்தேகத்திற்குரிய பொருட்கள் அல்லது பைகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் தெரிவிக்குமாறு பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளுக் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ெரயில்வே பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டனர்.