தென்காசியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-06 19:42 GMT
தென்காசி:
தென்காசியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ல் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு தினமாக கருதி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டிசம்பர் 6-ந் தேதியான நேற்று பாபர் மசூதி இடத்தை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தென்காசி மாவட்ட த.மு.மு.க. சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். செயலாளர் அஹமது ஷா வரவேற்று பேசினார். துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் பண்பொழி செய்யதலி, கடையநல்லூர் பாசித், புளியங்குடி மஜீத், வீராணம் ஷாஜகான், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ஹமீது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கி துரை, மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் அலி ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகம்மது சாதிக் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சிக்கந்தர், வழக்கறிஞர் சர்தார், அரபாத், மாநில துனை தலைவர் ரபீர் அஹ்மது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.  

மேலும் செய்திகள்