அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது
அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் வடக்கு அய்யனார் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி, அரிகேசவநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஆட்டோவில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று ஆட்டோ மீது மோதுவது போல் சென்றது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரும் பஸ்சை விரட்டி சென்று முன்பக்க கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி மந்திரமூர்த்தி, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.