புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-12-06 19:09 GMT
விராலிமலை
விராலிமலை தாலுகா, பூதகுடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் அங்குள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது  பூதகுடி கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 40) மற்றும் சேட்டு (55) ஆகிய இருவரும் அவர்களது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்