விவசாயிகளுக்கு மண்வள அட்டை வினியோகம்
விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
சிவகங்கை,
விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
உலக மண்வள தின விழா
விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும் போது, பொதுவாக விவசாயிகள் தங்களின் நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதித்து அந்த மண்ணிற்கு எந்த வகையான சத்து தேவை என்பதை அறிந்து அந்த சத்துள்ள உரத்தை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம் என்றார்.
மண்வள அட்டை
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர்கள் பழ.கதிரேசன், பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)சர்மிளா, வேளாண்மை உதவி இயக்குனர்கள் பரமேஸ்வரன், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தூர்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிவகங்கை மண் ஆய்வகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண் ஆய்வு தொடர்பான கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். இதில் விவசாயிகளுக்கு மண்வளமும் பயிர்வளமும், பயிர்களுக்கான மேலாண்மை, மீன்வளர்ப்பு, நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோயினை கட்டுப்படுத்தும் மேலாண்மை தொழில்நுட்பங்கள், மண்ணின் தன்மைக்கேற்ப சிறுதானியப்பயிர்கள் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.