பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
வேலூர்
வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் மகேஸ்வரி (வயது 53) என்பவர் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மகேஸ்வரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர். இந்தநிலையில் அரசு பணியாளர் நன்னடத்தை விதியின் கீழ் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.