காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் ரூ.8 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்

காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் ரூ.8 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்.

Update: 2021-12-06 17:55 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும், அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் பழுதாகி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் புகார்கள் வந்தது. இது குறித்து அறிந்த தமிழக மின்வாரியம் காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி காஞ்சீபுரம் மடம் தெரு பகுதியில் உள்ள சுந்தரி அவன்யூ மற்றும் குருகோவில் அருகே உள்ள கச்சபேஸ்வரர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 63 கிலோவாட் திறன் கொண்ட 2 டிரான்ஸ்பார்மர்களை காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் கே ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்