எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல்கனி, பொருளாளர் சையது முகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகமது ரசின் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேேபால் திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பழனி மயில் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கைசர் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக்அலி, பழனி நகர தலைவர் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நத்தம் தொகுதி தலைவர் அபுதாகிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செயலாளர் சாதிக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.