திருவொற்றியூரில் சாலையில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு

திருவொற்றியூரில் சாலையில் திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-06 13:40 GMT
திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அருகில் உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 4 அடி ஆழம், 6 அடி அகலத்தில் ஏற்பட்ட அந்த பள்ளத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையறிந்து வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையிலான போலீசார், அதன் அருகில் யாரும் செல்லாதபடி பாதுகாப்புக்காக பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்தனர்.

மேலும் செய்திகள்