தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-12-06 11:55 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சிலோன்காலனி பகுதியில் கஞ்சா விற்றுகொண்டிருந்த சின்னமணிநகரை சேர்ந்த ரதீஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மில்லர்புரம் பகுதியில் கஞ்சா விற்றதாக வெங்கடேச பிரசாத் (22) என்பவரும், 3-வது மைல் பாலம் அருகே கஞ்சா விற்றதாக டூவிபுரம் 10-வது தெருவை சேர்ந்த இசக்கிகணேஷ் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்