இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: காவிரி ஆற்று பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காவிரி ஆற்று பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2021-12-05 21:15 GMT
ஈரோடு
இன்று (திங்கட்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ரெயில் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியையும், சோதனையையும் தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கு பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. மேலும், ஓடும் ரெயில்களிலும் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்