மீன் கடைக்காரருக்கு கத்திக்குத்து

மீன் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2021-12-05 19:39 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் காலனி தெருவை சேர்ந்தவர் சித்திரவேல்(வயது 40). இவர் சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று மீன் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சித்திரவேல் சிறுவாச்சூரில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், சித்திரவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்திரவேலின் உடலில் கை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ரத்த காயங்களுடன் சித்திரவேல் வீட்டிற்கு நடந்து சென்றார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற அவரது நண்பர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சித்திரவேலை அழைத்து சென்று சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்