விபத்தில் 2 வாலிபர்கள் பலி

விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Update: 2021-12-05 18:17 GMT
சிவகாசி, 
சிவகாசியில் அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
பஸ் மீது மோதல் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று இரவு ஏழாயிரம்பண்ணைக்கு புறப்பட்டு சென்றது. சசிநகர் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த வீராச்சாமி மகன் பொன்னுப்பாண்டி (வயது 23), கந்தசாமி மகன் குமார் (29) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 
இந்நிலையில் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பொன்னுப்பாண்டி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
2 பேர் சாவு 
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதனை செய்த போது அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 
இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, பொன்னுப்பாண்டி, குமார் உடல்களை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்