செங்கல்பட்டு மாவட்டத்தில் விதவை பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-12-05 11:12 GMT
செங்கல்பட்டு மாவட்ட ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் உள்ளது.

2021-22ம் நிதி ஆண்டிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் (காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்தூர், புனித தோமையர் மலை) 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 800 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகள் கொள்முதல் செய்து வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் பெண் பயனாளிகள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று வருகிற 9-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்