அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை

Update: 2021-12-04 20:11 GMT
தளி, 
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை அமாவாசை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
 அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றார்கள்.
சாமிதரிசனம்
அந்த வகையில் நேற்று கார்த்திகை அமவாசையை முன்னிட்டு மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகஏராளமான பக்தர்கள்திருமூர்த்திமலைக்கு வந்திருந்தனர். 
பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கோவிலுக்கு முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சில பக்தர்கள் பாலாற்றின் கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அணைப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.இதனால் கோவில் மற்றும் அணை பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

மேலும் செய்திகள்