கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்கள் விற்ற அவதானப்பட்டி நாகராஜ் (37), சாமல்பட்டி அமான்கான் (42), சூலாமலை முருகேசன் (36), பேடரப்பள்ளி சிவக்குமார் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஓசூர் பேடரப்பள்ளி வேடியப்பன் (37), சூதாளம் முருகேஷ் (45), ஓசூர் இந்திரா நகர் வெங்கடசாமி (80), ஓசூர் என்.ஜி.ஓ. காலனி ஆனந்த் ஹேம்நாத் (40), பேரிகை ராஜா தெரு ராஜேஷ் (27), ஜிட்போனப்பள்ளி ராமச்சந்திரா (36), சீபம் திருமலேசன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊத்தங்கரை நாராயன் நகர் இம்பராஹிம் (70), சாமல்பட்டி அப்துல் காதர் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.