கல்லாற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி

மாயமான சமையல் தொழிலாளி கல்லாற்றில் பிணமாக மிதந்தார்.

Update: 2021-12-04 20:08 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 50). சமையல் தொழிலாளியான இவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காளிமுத்துவின் மகள் மாரியம்மாள் நேற்று முன்தினம் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், காளிமுத்து வெண்பாவூர் கல்லாறு பகுதிக்கு சென்றதாக கூறியிருந்தார். இதனையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வெண்பாவூர் கல்லாற்று தண்ணீரில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பெரியவடகரை அருகே காளிமுத்துவின் பிணம் ஆற்று தண்ணீரில் கரை ஒதுங்கி மிதந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் காளிமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்