பிரபல ரவுடி கைது

தூததுக்குடியில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-04 16:51 GMT
தூத்துக்குடி:
புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டாம்புளி பழைய பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில, புதியம்புத்தூரை சேர்ந்த முருகன் என்ற யமஹா முருகன் என்பதும், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் முருகனை கைது செய்தனர்.
பிரபல ரவுடியான முருகன் மீது புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட 3 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தாளமுத்து நகர் போலீசில் 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், தட்டப்பாறை போலீசில் ஒரு திருட்டு வழக்கும் உள்பட மொத்தம் 15 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்