மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நத்தம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-12-04 16:46 GMT
நத்தம்:
நத்தம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராணி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், நத்தம் பகுதியில் அரசு ஜவுளிபூங்கா அமைக்க வேண்டும், சேதமடைந்து கிடக்கும் நத்தம்-செந்துறை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்