கஞ்சா விற்ற மீனவர் கைது

கஞ்சா விற்ற மீனவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-04 16:41 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புன்னக்காயல் அருகே உள்ள சோதனை சாவடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புன்னக்காயல் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் மீனவரான ஜெயராஜ் என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்