கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு

கோபி அருகே கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-12-04 15:00 GMT
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. குறிப்பாக பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அங்கு அருவிபோல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
இதைத்தொடர்ந்து கொடிவேரி அணை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்