கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

Update: 2021-12-03 23:26 GMT
தென்காசி :
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 152 பேர் குணமடைந்து விட்டனர். 83 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 433 பேர் பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 500 ஆக உள்ளது. நேற்று 5 பேர் உள்பட இதுவரை 56 ஆயிரத்து 59 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்