விவசாயி வீட்டில் நகை திருட்டு

விவசாயி வீட்டில் நகை திருட்டு

Update: 2021-12-03 22:52 GMT
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 56) விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டின் கதவை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனால் நள்ளிரவில் கதவை திறந்து வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்குள்ள பீரோவில் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததால் சந்தேகம் அடைந்த சுடலைமுத்து, சரிபார்த்தபோது 7 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்